தமிழ்நாடு டிஜிபி நியமன விவகாரம் உச்சநீதிமன்றத்தில் மீண்டும் ஹென்றி டிபேன் வழக்கு

தமிழ்நாடு டிஜிபி நியமன விவகாரம் உச்சநீதிமன்றத்தில் மீண்டும் ஹென்றி டிபேன் வழக்கு


சென்னை, அக். 21 - இந்தியப் பணியாளர் தேர்வாணையம் பரிந்துரை பட்டியல் அனுப்பியும், தமிழ்நாட்டிற்கு நிரந்தர டிஜிபி நியமிக்கப்படாததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் இரண்டாவது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு காவல்துறை இயக்குநராக இருந்த சங்கர் ஜிவாலின் பணிக்காலம் ஆகஸ்ட் மாதத்துடன் நிறைவு பெற்றது. விதிமுறைப்படி தகுதி வாய்ந்த அதிகாரிகள் பட்டியலை மூன்று மாதத்திற்கு முன்னதாகவே இந்தியப் பணியாளர் தேர்வாணையத்திற்கு தமிழ்நாடு அரசு அனுப்பியிருக்க வேண்டும். ஆனால் ஆகஸ்ட் இறுதியில்தான் இந்தப் பட்டியலை அனுப்பியது. முன்னதாக தற்காலிக டிஜிபி நியமிக்கப்படக்கூடாது, யுபிஎஸ்சி மூலமாக தேர்ந்தெடுத்தே நியமிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டது. அந்த வழக்கில் யுபிஎஸ்சி மூலமாக முறையாக டிஜிபி நிய மிக்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு உத்தர விடப்பட்டது. இதற்கிடையில் தற்காலிக டிஜிபியாக வெங்கட்ராமனை தமிழ்நாடு அரசு நியமித்தது. இது நீதிமன்ற அவமதிப்பு என்று மூத்த வழக்கறிஞரும், மக்கள் கண்காணிப்பகத் தலைவரு மான ஹென்றி டிபேன் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். உச்சநீதிமன்றம் யுபிஎஸ்சியிடம் பரிந்துரை பட்டியல் அனுப்புமாறு உத்தரவிட்டது. இதையடுத்து யுபிஎஸ்சி மூன்று பேர் கொண்ட பட்டியலை தமிழ்நாடு அரசுக்கு அனுப்பியது. இதனிடையே, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையும், உச்சநீதிமன்றமும் உத்தரவிட்டும், உத்தரவின் பேரில் யுபிஎஸ்சி மூன்று பேரை தேர்வு செய்து அனுப்பியும் இதுவரை நிரந்தர டிஜிபி நியமிக்கப் படாதது நீதிமன்ற அவமதிப்பு என்று சுட்டிக்காட்டி, இரண்டாவது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உச்சநீதிமன்றத்தில் ஹென்றி டிபேன் தொடுத்துள்ளார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%