பண்ருட்டியில் அதிகபட்சமாக 198 மி.மீ. மழை! சென்னையில் எவ்வளவு?
Oct 23 2025
13

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் 198 மி.மீ. மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள புயல் சின்னம் காரணமாக பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகின்றது.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணிமுதல் இன்று காலை 9.30 மணிவரை பதிவான மழை விவரம் குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை கடலூர் மாவட்டம், பண்ருட்டி தாலுகா, நெல்லிக்குப்பத்தில் அதிகபட்சமாக 198 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. விழுப்புரம் வாணூரில் 171 மி.மீ., கடலூர் பத்திரிகுப்பத்தில் 168 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை அதிகபட்சமாக எண்ணூரில் 118 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. நெற்குன்றத்தில் 110 மி.மீ., மதுரவாயலில் 106 மி.மீ., மேடவாக்கத்தில் 103 மி.மீ., நுங்கம்பாக்கத்தில் 97 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
இதனிடையே, புதுச்சேரியின் பெரிய காலாப்பட்டுவில் 250 மி.மீ. மழையும், புதுவை நகரில் 210 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?