
பாபநாசம், அக். 21- தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், பாபநாசம் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமை, கும்பகோணம் எம்.எல்.ஏ அன்பழகன் தொடங்கி வைத்தார். இதில் பாபநாசம் பேரூராட்சித் தலைவர் பூங்குழலி, பாபநாசம் வட்டாட்சியர் பழனிவேல், பாபநாசம் பேரூராட்சி செயல் அலுவலர் குமரேசன், மாவட்ட இணை இயக்குனர் அன்பழகன், வட்டார மருத்துவ அலுவலர் ஜெகன் உள்பட தஞ்சாவூர், கும்பகோணம், பாபநாசம் சுற்று வட்டாரப் பகுதி மருத்துவர்கள் பங்கேற்றனர். இதில் ஆயிரத்து ஐம்பத்து ஐந்து பயனாளிகள் பங்கேற்றனர். இதில் எடை, உயரம், ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை அளவு பரிசோதிக்கப்பட்டது. காது, மூக்கு, தொண்டை, எலும்பு முறிவு, நரம்பியல் கண், மன நலம், பொது மருத்துவம், ஆயுஷ் உள்ளிட்ட பிரிவுகளில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. முகாமில் எக்ஸ்ரே, ஈசிஜி, ஸ்கேன் மேற்கொள்ளப்பட்டது.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?