தஞ்சாவூரில் நெல் மூட்டைகளை அனுப்பும் பணிகளை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு

தஞ்சாவூரில் நெல் மூட்டைகளை அனுப்பும் பணிகளை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு



தஞ்சாவூர், அக். 21- தஞ்சாவூர் மாவட்டத்தில், நடப்பு பருவத்தில் நெல் விவசாயம் செய்துள்ள விவசாயிகளிடமிருந்து, அறுவடை செய்யப்பட்ட நெல், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், கொள்முதல் செய்யப்பட்ட நெல்மூட்டைகளை, ரயில் நிலையத்தில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில், அனுப்பும் பணிகளை மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் (அக்.21) செவ்வாய்க்கிழமை நேரில் பார்வையிட்டு நெல் கொள்முதல் பணிகளை துரிதப்படுத்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், தஞ்சாவூர் மாவட்டத்தில் விவசாயிகளால் விளைவிக்கப்பட்ட நெல்லினை முழுமையாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலமாக கொள்முதல் செய்யவும், கொள்முதல் செய்யப்பட்ட நெல்லினை விரைவாக இயக்கம் செய்யவும் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். முன்னதாக, தஞ்சாவூர் மாவட்டம் ஆலக்குடி ஊராட்சியில், வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில், வடகிழக்கு பருவ மழையினால் விவசாயிகள் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, வேளாண்மை இணை இயக்குநர் கோ.வித்யா, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் நெ.செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%