புதுடெல்லி,டிச, 11
அம்ரித் பாரத் நிலையத் திட்டத்தின் கீழ், ரயில் நிலையங்களை மேம்படுத்த நாட்டில் இதுவரை 1,337 ரயில் நிலையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சர் அவினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் நேற்று காங்கிரஸ் உறுப்பினர் விஷ்ணு பிரசாத் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், தமிழ்நாட்டில் 77 ரயில் நிலையங்களை இத்திட்டத்தின் கீழ் மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அதில் கடலூர் மக்களவை தொகுதியில் இடம்பெற்றுள்ள விருத்தாசலம், திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையங்களும் அடங்கும். இதுவரை தமிழ்நாட்டில் 17 ரயில் நிலையங்களில் இதற்கானப் பணிகள் நிறைவடைந்துள்ளன. திருப்பாதிரிப்புலியூர், கடலூர் துறைமுக நிலையம், பண்ருட்டி, பெண்ணாடம் ரயில் நிலையங்களிலும் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டில் இத்திட்டத்திற்காக கடந்த நான்கு ஆண்டுகள் மற்றும் நடப்பாண்டில் ரூ.5,449 கோடி ஒதுக்கப்பட்டு அதில் ரூ.4,439 கோடி செலவிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?