ஒரு உயிரின்
மூச்சுக்காற்றோடு
இன்னொரு உயிர்
விளையாடுகிறது
ஆனந்தத்தில்
உடைந்த பலூனைப் பார்த்து
ஒப்பாரி வைத்து அழுதது
குழந்தை
பலூனின்
மூச்சுக்காற்றைத் தேடி
ஜான் வயிற்றுக்காக
தன் மூச்சுக்காற்றை
விற்பனை செய்கிறார்
பலூன் வியாபாரி
தனது வயிற்றை நிரப்ப
குழந்தையின் வயிற்றை
குலுங்க குலுங்க சிரிக்க வைக்கிறார்
பலூன் வியாபாரி
பாலூட்டும் தாயை
மறந்து விடுகிறது
குழந்தை
பலூனை பார்த்ததும்
ஒரு மூச்சுக்காற்று
பல வண்ணங்களாய்
ஜொலிக்கிறது
சிரித்து விளையாடிய
குழந்தையின் மனது
உடைந்து விடுகிறது
பலூன் உடையும் பொழுது
செடியும் இல்லை
மரமும் இல்லை
ஆனால்
வண்ண வண்ண பூக்களாக
பூத்துக் குலுங்குகிறது
விதி
வீதியில் விளையாடுகிறது
பலூனுக்குள் உயிரை வைத்து
பாரதி முத்து
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?