தமிழ் வளர்ச்சித் துறையின் மூலமாக திருக்குறள் பயிற்சி

தமிழ் வளர்ச்சித் துறையின் மூலமாக திருக்குறள் பயிற்சி



பாப்பாரப்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஆலமரத்துப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் தமிழ் வளர்ச்சித் துறையின் மூலமாக திருக்குறள் திருப்பணிகள் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது. 

பாப்பாரப்பட்டி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பயிற்சி வகுப்பில் பள்ளியின் தலைமை ஆசிரியர்

பெ. சுமதி தலைமையிலும்,

ஆலமரத்துப்பட்டி உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற பயிற்சி வகுப்பில் தலைமை ஆசிரியர் சிவசுப்பிரமணியம் தலைமையிலும் பயிற்சி நடைபெற்றது.

இப்பயிற்சியின் நோக்க உரையை கம்பன் கழக செயலாளர் புலவர் குமரவேல் எடுத்துரைத்து அனைவரையும் வரவேற்றார்.

பயிற்சியை உலக தமிழ் பண்பாட்டுச் சங்கத் தலைவர் தமிழ் மகன் ப. இளங்கோ தொடங்கி வைத்து மாணவர்கள் ஒழுக்கத்துடன் வாழ திருக்குறள் படிக்கவேண்டும்,

நாளும் ஒரு திருக்குறள் கற்று

வந்தால் நம்முடைய நற்பழக்கங்கள் மேலோங்கும்,

படிப்பில் ஆர்வம் உண்டாகும் என எடுத்துரைத்தார்.

பயிற்சியை முதுகலை ஆசிரியர் பெ. சுமதி,

தமிழ் ஆசிரியர்

இந்திரா, புஷ்பாகரன் உள்ளிட்டோர்

மாணவர்களுக்கு வழங்கினார்கள்.

மாணவர்களின் பேச்சுத் திறன் மற்றும் திருக்குறள் ஆர்வம் கண்டறியப்பட்டு திருக்குறள் புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் பாலசுப்பிரமணியம் உட்பட பலரும் கலந்து கொண்டார்கள்.

கம்பன் கழக இணை செயலாளர் அண்ணாமலை நன்றி கூறினார்.

தமிழ்க் கவிஞர் மன்ற ஒருங்கிணைப்பாளர்

கூத்தப்பாடி மா. பழனி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%