தருமபுரி மாவட்டத்தில் உரிமம் இல்லாத நாட்டுத்துப்பாக்கிகளை செப்டம்பர் 10க்குள் ஒப்படைக்க உத்தரவு
Aug 25 2025
13

தருமபுரி, ஆக. 23–
தருமபுரி வனக்கோட்டத்தில் ஒகேனக்கல் நீர்பிடிப்புப் பகுதியை உள்ளடக்கி யுள்ளது. இந்த வனப்பகுதிகளில் சந்தனம், தேக்கு, ஈட்டி, கருவேலம், வாகை, துறிஞ்சி மற்றும் இதர மர வகைகள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. இதேபோல அதிக அளவில் யானைகள், காட்டெருமைகள், புள்ளிமான்கள், மயில்கள், பன்றிகள் மற்றும் இதர பறவை இனங்கள், அரியவன உயிரினங்கள் உள்ளன. இந்த வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் வசித்து வரும் பொதுமக்கள் யாரேனும் உரிமம் இல்லாமல் நாட்டு துப்பாக்கிகள் வைத்தி ருந்தால் அதை செப்டம்பர் 10 ஆம் தேதிக்குள் வனத்துறை அலுவலர்களிடமோ, காவல்துறை அலுவலர்க ளிடமோ அல்லது ஊர் முக்கியஸ்தர்களிடமோ தாமாக முன்வந்து ஒப்படைக்க வேண்டும். அவ்வாறு ஒப்படைக்கும் நபர்கள் மீது வனக்குற்ற வழக்குகள் ஏதும் பதிவு செய்யப்படாது.
ஆனால், ஒப்படைக்காமல் உரிமம் பெறாமல் நாட்டுத் துப்பாக்கிகள் வைத்திருக்கும் பட்சத்தில் செப்டம்பர் 10 ஆம் தேதிக்குப் பின்னர் காவல் துறையுடன் இணைந்து, பயிற்சி அளிக்கப்பட்ட மோப்ப நாய்கள் மூலம் மலைக்கிராமங்கள் மற்றும் சுற்றியுள்ள வனக் கிராமங்களில் சோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
இச்சோதனை மூலமாகவோ அல்லது வேறு வகையிலோ உரிமம் பெறாமல் நாட்டுத் துப்பாக்கிகள் வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் தொடர்புடையவர்கள் மீது வன உயிரின பாதுகாப்புப் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு மாவட்ட வன அலுவலர் கா.இராஜாங்கம் தெரிவித்தார்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?