முதுமலை முகாமில் யானையின் காலை கத்தியால் வெட்டிய பாகன் பணி நீக்கம்
Aug 25 2025
14

நீலகிரி, ஆக. 23–
நீலகிரி மாவட்டம், முதுமலை யானைகள் வளர்ப்பு முகாமில், கடந்த சில நாட்களுக்கு முன் யானையின் காலை கத்தியால் வெட்டிய பாகன் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
நீலகிரி மாவட்டம் முதுமலையில் உள்ள யானைகள் வளர்ப்பு முகாமில் 20-க்கும் மேற்பட்ட யானைகளை வனத் துறையினர் பராமரித்து வருகின்றனர். ஒவ்வொரு யானைக்கும் வனத் துறை சார்பில் ஒரு பாகன் பராமரிப்புப் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளார். இங்குள்ள அபாரண்யம் யானைகள் முகாமில் சுமங்கலா என்ற யானை உள்ளது. இதை கிருமாறன் என்ற பாகன் பராமரித்து வந்தார். இந்த யானை இரவு நேரத்தில் காட்டுக்குள் சென்றுவிட்டு, அதிகாலையில் முகாமுக்கு வந்து அங்கிருந்த யானைகளை தாக்கி வந்துள்ளது.
இந்நிலையில் இந்த சுமங்கலா யானை கடந்த சில நாள்களுக்கு முன் சங்கர் என்ற யானையை முட்டிக் கீழே தள்ளியது. இதனால் ஆத்திரமடைந்த அந்த யானையின் பாகன் விக்கி, சுமங்கலா யானையை குச்சியால் தாக்கி விரட்ட முயன்றார். ஆனால், சுமங்கலா யானை மீண்டும் சங்கர் யானையை தாக்கியது. இதனால் கோபமடைந்த பாகன் விக்கி, அங்கிருந்த கத்தியால் சுமங்கலா யானையின் பின்னங்காலில் வெட்டினார்.
இதையறிந்த சுமங்கலா யானையின் பாகன் கிருமாறன், இது குறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து, கால்நடை மருத்துவர் ராஜேஷ்குமார், துணை கள இயக்குநர் வித்யா ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து யானையைப் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். பின்னர் காலில் காயமடைந்த யானைக்கு கால்நடை மருத்துவர் சிகிச்சை அளித்தார். இந்நிலையில் சுமங்கலா யானையை கத்தியால் வெட்டிய விவகாரம் தொடர்பாக பாகன் விக்கியை பணி நீக்கம் செய்யப்பட்டார்."
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?