தர்மஸ்தலா கொலைகள்: 11-வது இடத்தில் சேலை, மனித எலும்புக்கூடு கண்டுபிடிப்பு
Aug 07 2025
23

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடி தாலுகா தர்மஸ்தலாவில் மஞ்சுநாதர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் தூய்மை பணியாளராக பணியாற்றிய சாம்ராஜ்நகர் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர், 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் இளம்பெண்களை பலாத்காரம் செய்து கொன்று உடல்களை கோவில் நிலத்திலேயே புதைத்துவிட்டதாக பகீர் தகவலை வெளியிட்டார்.
இதை விசாரிக்க சிறப்பு சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) அமைக்கப்பட்டது. ர்மஸ்தலாவில் மஞ்சுநாதர் கோவில் அருகில் உள்ள நேத்ராவதி ஆற்றங்கரையோர வனப்பகுதியில் உடல்கள் புதைக்கப்பட்ட 35-க்கும் மேற்பட்ட இடங்களை புகார்தாரர் அடையாளம் காட்டினார்.
அவர் குறிப்பிட்ட இடங்களில் கடந்த வாரம் முதல் புலனாய்வுக் குழு, தடயவியல் குழுவுடன் ஆய்வு நடத்தி வருகிரறது.
இந்நிலையில் நேற்று (திங்கள்கிழமை) தேடுதல் பணியில் நேத்ராவதி ஆற்றின் கரையில் உள்ள காட்டுப் பகுதியில் புகார்தாரர் குறிப்பிட்ட 11வது இடத்திற்கு அருகில் மனித எலும்புகள் கண்டெடுக்கப்பட்டன. மூன்று அடி தூரம் தோண்டிய பிறகு, சேலையின் ஒரு பகுதி மற்றும் எலும்பு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
முன்னதாக கடந்த வாரம் தேடுதலின் மூன்றாவது நாளில், புகார்தாரர் குறிப்பிட்ட ஆறாவது இடத்தல் இருந்து சுமார் 15 எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
இவை பரிசோதனைக்காக பெங்களூருவில் உள்ள ஒரு ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டன. திங்கட்கிழமை கண்டுபிடிக்கப்பட்ட எலும்புகளும் பரிசோதனைக்கு அனுப்பப்பட உள்ளது.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?