
திருவனந்தபுரம்:
கேரளாவின் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கடந்த ஜூன் 14ம் தேதி அவசர கதியில் தரையிறக்கப்பட்ட பிரிட்டீஷ் கடற்படைக்குச் சொந்தமான எப் 35 பி விமானம், பழுது நீக்கப்பட்ட நிலையில் இன்று (ஜூலை 22) தாயகம் திரும்பிச் சென்றது.
பிரிட்டன் கடற்படைக்கு சொந்தமான, 'எப் - 35' பி ஜெட் விமானம், கடந்த மாதம் 14ல், அரபிக்கடல் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டது. அப்போது, எரிபொருள் பற்றாக்குறையால் அந்த விமானம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
இந்திய அரசு சார்பில் எரிபொருள் வழங்கிய நிலையிலும், அந்த விமானம் பறக்க முடியவில்லை. பழுதாகி நின்று விட்டது. அந்தநாட்டு பொறியாளர்கள் எவ்வளவோ முயன்று போராடியும் பழுது நீக்க முடியவில்லை. இதனால் விமானம், ஓடுபாதையில் நிறுத்தப்பட்டிருந்தது.
உலகின் விலை உயர்ந்த விமானம் இப்படி பழுதாகி நிற்பது குறித்து, இணையத்தில் நெட்டிசன்கள் கேலி கிண்டல் விமர்சனம் செய்தனர். பழுது நீக்க முடியவில்லை என்றால், எப்படி கொண்டு செல்வது, சரக்கு விமானத்தில் துாக்கிச்செல்வதா இல்லை ஒவ்வொரு பாகமாக கழற்றி கொண்டு செல்வதா என்று ஆலோசனை நடத்தப்பட்டது.
எதற்கும் கடைசி முயற்சியாக இருக்கட்டும் என்று கருதி, பிரிட்டனில் இருந்து தனி விமானத்தில் அழைத்து வரப்பட்ட விமானப்படை பொறியாளர்கள் 24 பேர், கடும் முயற்சி எடுத்தனர்.
அதன் பயனாக பழுது நீக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த விமானம் இன்று (ஜூலை 22) தாயகம் திரும்பிச் சென்றது. இந்த விமானம் விமான நிலையத்தில் இருந்து தாயகம் புறப்பட்ட வீடியோ வெளியாகி உள்ளது.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?