திருக்கார்த்திகை தீபத் திருவிழா பத்தாம் நாள் கார்த்திகை மகா தீபம்.........

திருக்கார்த்திகை தீபத் திருவிழா பத்தாம் நாள் கார்த்திகை மகா தீபம்.........

 திருவண்ணாமலை டிசம்பர்- 3 அருள்மிகு அண்ணாமலையார் திரு கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு இன்று அதிகாலை பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2668 அடி உயர மலை உச்சியில் வானவேடிக்கையுடன், சங்குகள் முழங்க, மேள தாளத்துடன் மகா தீபம் ஏற்றப்பட்டது. பஞ்ச மூர்த்திகள் பத்தாம் நாள் இரவு அலங்காரத்தில் காட்சி அளிக்கும் காட்சி அண்ணாமலையார், உண்ணாமலையம்மன், திருவண்ணாமலை பருவதராஜனின் மகள் பார்வதி வழிவந்த வம்சவாலியினருக்கே தீபம் ஏற்றும் உரிமை 48 நாட்கள் விரதம் இருந்து பரிவட்டத்துடன் மலை ஏறி தீபம் ஏற்றுவார்கள். ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே காட்சியளிக்கும் அர்த்தநாரீஸ்வரர் ஆட்டம் பார்க்க கண்கொள்ளாக் காட்சி.அக்னி வடிவில் ஜோதியாக காட்சி அளிக்கும் அண்ணாமலையார். பக்தர்கள் அரோகரா அரோகரா என்று முழக்கமிட்டு அண்ணாமலையார் உண்ணாமலை அம்மனை வேண்டி அருள் பெற்றனர். தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%