8 ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆசிரியர் ஒரு தலைப்புக் கொடுத்து கட்டுரை எழுதச் சொன்னார். தலைப்பு
திருடர்கள் .அதுபற்றி ஒரு மாணவன் எழுதியதைப் படியுங்கள்.
திருடர்களும் ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் பங்கு வகிக்கிறார்கள்.வேலைவாய்ப்பு நாட்டின் முன்னேற்றத்தில் அவர்கள் பங்கு அளப்பரியது.
திருடர்கள் இருப்பதனால் தான் பாதுகாப்பறை பூட்டுகள்
பொருட்களை வைத்துப் பூட்டிப் பாதுகாக்க அலமாரிகள் செய்ய வேண்டியதாகிறது.அவற்றைத் தயாரிக்கப் பல தொழிற்சாலைகள் அதில் பணியாற்ற ஊழியர்கள் எனப் பலருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கிறது.
வீடுகளில் பாதுகாப்புக்காக இரும்புக் கதவுகள் சாளரங்கள் (ஜன்னல்கள்) மூடக் கதவுகள் பூட்டுக்கள் தயாரிக்க வேண்டிய தாகிறது. இதனால் கொத்தனார்கள், கொல்லர்களுக்கு வேலை கிடைக்கிறது.
வீடுகள் பள்ளிகள் கல்லூரிகள்
ஆலைகள் கடைகள்
ஆகியவற்றைத் திருடர்களிடம் இருந்து காப்பாற்ற காவலர்களை
நியமிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. மறுக்க முடியுமா?
பெரிய நிறுவனங்கள் வீடுகளில் கூட கண்காணிப்பு காமிராக்களைப் பொருத்த வேண்டியதாகிறது.
இவ்வளவு தானா என்றால் இல்லை இன்னும் எவ்வளவோ!
திருடர்களைப் பிடிக்க விசாரிக்க வழக்குத் தொடுக்க தண்டணை பெற்றுக் கொடுக்க நாடு முழுவதும் ஏராளமான காவல் நிலையங்கள்
விசாரிக்க நீதிமன்றங்கள்
பணியாளர்கள் வழக்குரைஞர்கள் நீதியரசர்கள் தண்டனை பெறுவோர் தண்டனைக் காலத்தில் குடியிருக்க சிறைச்சாலைகள் காவலர் குடியிருப்புகள்
எனப் பலரும் பணி பெறுகிறார்கள்.
திருடர்களிடம் திருட்டுப் போவதால் பொருட்களைப் பறி கொடுத்தோர் அனைத்துப் பொருட்களையும் மீண்டும் விலைக்கு வாங்க வேண்டியதாகிறது.
அதனால் உற்பத்தி செய்ய வேண்டியதாகிறது.
பொருளாதார வலு காரணமாக சமூக செல்வாக்குப் பெற்ற திருடர்கள் சிலர் அரசியலில் நுழைந்து தேர்தலில் கூட நிற்கிறார்கள். வெல்கிறார்கள். அவர்களும் பணத்தை
வாரி இறைக்கும் போது பணப் புழக்கம் ஏற்படுகிறது.
எனவே திருடர்கள் நாட்டின் பொருளாதாரத்தில் குறிப்பிடத் தக்க பங்கு வகிக்கிறார்கள் என்றால்
மிகையாகாது.”
என்று எழுதியிருந்தானாம்.
ஆசிரியர் அந்த மாணவனுக்கு 💯 மதிப்பெண் வழங்கினாராம்.அவனைத் திறமையான மாணவர் பட்டியலில் சேர்த்துக் கொண்டாராம்.
்என்னே மாணவன் மதி
நுட்பம்!
சிவ. சே. முத்துவிநாயகம்
திருநெல்வேலி
பிகு:- வெறும் வாய்க்கு அவல் கிடைச்ச மாதிரி
செய்தித் தாள்கள் தொலைக் காட்சிப் பெட்டிகளில் திருட்டு பற்றிய செய்தியை அவரவர்க்குத் தெரிந்த மாதிரி செய்தியாகப் போட்டு நாலைந்து நாட்கள் வணிகம் செய்ய வாய்ப்பாகி விடுகிறது.
பாவம் பையன் விட்டு விட்டான்.