சீறுநீரகவிற்பனை

சீறுநீரகவிற்பனை

சீறுநீரகவிற்பனை!

             முருகேசன், அவன்மனைவி இருளாயி இருவரும் ஒரு கிராமத்தில் வசித்து வந்தார்கள். 

இருளாயி 100நாள் வேலைதிட்டத்தில் வேலை செய்பவள், தவிர மகளிர் சுய உதவிக்குழுதலைவி வேறு. இருவரும் +2வரை படித்தவர்கள். 

முருகேசன் ஒருகம்பெனி செக்யூரிட்டி அலுவலர். 

தினமும் காலை அலுவலகம் வந்து எல்லாம் சரியாக இருப்பதை உறுதி செய்து, தன்னுடைய பணியைசெய்பவர். 

அலுவலக உணவு விடுதியில் காபி, டீ மட்டுமே குடிப்பார். 

சாப்பாடு மனைவி தருவதை ரசித்து சாப்பிடுவார். சாப்பாட்டில் சாதம், சாம்பார், பொறியல்,மோர் இருக்கும். எப்போதாவது மீன்குழம்பு மணக்கும், மட்டன், சுக்கா வறுவல் இதெல்லாம்இருக்கும் நாட்களில் ஏதாவது விசேஷம் இருக்கும். 

அதன் பலனாக ஒரு மகன் பிறக்க அவனுக்கு மாடர்ன் பெயராக ஷரன் எனபெயரிட்டு வளர்த்தனர். அவனும் நாளொரு மேனியும்பொழுதும் வளர பள்ளியில் சேர்த்தனர். 

முருகேசனிடம் அவர் மனைவியும் பிரதமமந்திரியின் வீடு கட்டும்திட்டத்தில் சேர்ந்து வீடு கட்ட முடிவு செய்தனர். 

அதற்கு முருகேசன் சரி என்ற உடன் வீடுகட்டி கிரஹப்பிரவேசம் செய்யநாள் குறிக்க ப்பட்டு, அந்த சமயத்தில் பணம் தேவைப் பட்டது. 

மகளிர் சுய உதவி க்குழு மூலமாக பணம் கிடைக்க வில்லை .

முருகேசன் அலுவலகத்தில் மதியம் சாப்பிட்டு அதே சிந்தனையில் அன்றைய செய்தித்தாளை ப்பார்க்க,அதில் ஒரு அறிவிப்பைப்பார்த்தார்.

அதில் ஒரு தனவந்தர் தனக்கு சிறுநீரகம்

தேவை என்றும் அதற்கான தொகை ரூபாய் ஒரு இலட்சம் வழங்குவதாகவும்

ஆஹா நல்ல விஷயம் என்று நினைத்து அந்த விவரத்தை தன்மொபைலில் போட்டோ எடுத்து அதில் உள்ள எண்ணுக்கும் போன்செய்து, நேரில் சென்றுஅதற்குரிய மருத்துவ பரிசோதனைகள் முடித்து, எல்லாம் சரியாக இருக்க ஆபரேஷனுக்கு நாள் குறிக்கப்பட்டு வீட்டுக்கு வந்த பின் மனைவியிடம் சொல்ல,மனைவி நீங்க கொடுக்க வேண்டாம், நான் தருகிறேன் என்றாள் இருவருக்கும் அதில் சண்டை வர,முருகேசன் கோவப்பட்டான். 

இந்த சமயத்தில் அந்த பக்கமாக வந்த அஞ்சலை என்ற சுய உதவிக்குழு உறுப்பினர் ,

இவர்களின் சண்டையைக் கேட்டு சமாதானம் செய்ய ,முருகேசன் தனக்காக நிறைய தியாகம் செய்த மனைவிக்கும் மகனுக்கும் உதவவே இந்த விஷயம், மேலும் 100நாள் வேலைத்திட்டம் இப்போது சரியாக கிடைப்பதில்லை, இருளாயின்

உடலும், மனமும் ஒத்துழைக்கவில்லை, எனவே தான் இந்த முடிவு என்றதும் அஞ்சலை மூலமாக இருளாயி சரி என்றதும்

முருகேசன் சீறுநீரக தானம் செய்து பணம் பெற்று கிரகப்பிரவேசம் முடித்து மீதமுள்ள பணத்தை மனைவி மற்றும் மகன்பெயரில் டெபாசிட்செய்தான்.

பாரதிராஜன்என்கிற

ரங்கராஜன்.எஸ். வி.

அம்பத்தூரிலிருந்து.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%