திருப்பரங்குன்றம் விவகாரத்தில், உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதற்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அனுமதி வழங்கியுள்ளது. திருப்பரங்குன்றம் ஊர் மக்கள் என்ற பெயரில் இரா. பிரபு என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி ஸ்ரீமதி, காவல்துறையால் அனுமதிக்கப்பட்ட சன்னதி தெருவில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 50 பேர் உண்ணாவிரதம் இருக்கலாம்; அரசியல் வெளிப்பாடுகள் இருக்கக் கூடாது; மந்திரங்களை மட்டுமே ஒலிக்க வேண்டும் என்று கூறி அனுமதி அளித்துள்ளார். இதற்கிடையே, திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள சிக்கந்தர் தர்காவிற்கு, வியாழனன்று 2-ஆவது நாளாக இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. காவல் ஆணையாளர் அலுவலகத்திற்கும் இதுபோன்ற மிரட்டல் இ-மெயில் வந்தது.
கூட்டணி குறித்து முடிவெடுக்க விஜய்க்கு முழு அதிகாரம் நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்
சென்னை, டிச. 11 - தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்டச் செயலர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டம், வியாழக்கிழமை (டிச.11) அன்று பனையூரில் உள்ள கட்சித் தலைமை நிலையத்தில் நடைபெற்றது. பொதுச் செயலாளர் என். ஆனந்த், நிர்வாகக் குழுத் தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ. செங்கோட்டை யன், ஆதவ் அர்ஜுன் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர். இக்கூட்டத்தில், தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த சிறப்புக் குழு அமைக்கப்படும். தேர்தல் அறிக்கை தயாரிக்க தனி சிறப்புக் குழு அமைக்கப்படும். கூட்டணி குறித்து முடிவெடுக்க கட்சித் தலைவர் விஜய்க்கு முழு அதிகாரம் வழங்கப்படுகிறது. திமுக ஆட்சியை அகற்றி புதிய தமிழகம் அமைப்போம் என நான்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?