சதுப்பு நில அளவீட்டு பணிகள் நிறைவு

சதுப்பு நில அளவீட்டு பணிகள் நிறைவு

பள்ளிக்கரணை உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சதுப்பு நிலங்களை செயற்கைக்கோள் உதவியுடன் அளவிடும் பணிகள் முடிவடைந்துவிட்டதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் பல அடுக்கு குடியிருப்பு வளாகம் கட்ட சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம் அனுமதி வழங்கியதாக சர்ச்சை எழுந்தது. இதையடுத்து அதிமுக வழக்கறிஞர் அணி நிர்வாகி பிரஸ்ணவ் தொடர்ந்த பொதுநல மனுவில், நீதிமன்றம் கட்டுமான பணிகளுக்கு இடைக்கால தடை விதித்தது. இதனிடையே, வியாழக்கிழமை (டிச.11) நடந்த விசாரணையில், தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன், அளவீட்டு பணிகள் முடிவடைந்ததாகவும், மாவட்ட ஆட்சியர்களின் அறிக்கையைப் பெற்ற பின் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் எனவும் தெரிவித்தார். இதையடுத்து, வழக்கு ஜனவரி நான்காவது வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%