திருவள்ளூரில் கூடுதல் ரயில்களை நிறுத்தகோரி ரயில்வேக்கு 150-க்கும் மேற்பட்ட மின்னஞ்சல்கள் அனுப்பிய பயணிகள்

திருவள்ளூரில் கூடுதல் ரயில்களை நிறுத்தகோரி ரயில்வேக்கு 150-க்கும் மேற்பட்ட மின்னஞ்சல்கள் அனுப்பிய பயணிகள்

சென்னை:

திரு​வள்​ளூரில் கூடு​தல் ரயில்​களை நிறுத்​தக் கோரி, தெற்கு ரயில்​வேக்கு 150-க்​கும் மேற்​பட்ட மின்​னஞ்​சல்​கள் அனுப்பப்​பட்​டுள்​ளன. 1,000 மின்​னஞ்​சல்​களை அனுப்ப இலக்கு வைத்​துள்​ள​தாக பயணி​கள் தெரி​வித்​துள்​ளனர்.


சென்னை - அரக்​கோணம் வழித்​தடத்​தில் முக்​கிய ரயில் நிலை​ய​மாக, திரு​வள்​ளூர் ரயில் நிலை​யம் உள்​ளது. இங்​கிருந்து தினசரி ஒரு லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட மக்​கள் சென்​னைக்கு வந்து செல்​கின்​றனர். இந்த வழித்​தடத்​தில் 60-க்​கும் மேற்​பட்ட விரைவு ரயில்கள் செல்​கின்​றன. இருப்​பினும், நிறுத்​தம் இல்​லாத​தால், பயணி​கள் விரைவு ரயில்​களின் சேவையைப் பெற முடி​யாமல் பயணி​கள் அவதிப்​படு​கின்​றனர்.


இதையடுத்​து, கூடு​தல் விரைவு ரயில்​கள் நின்று செல்ல ரயில்வே உரிய நடவடிக்கை எடுக்​கக்​கோரி, திரு​வள்​ளூர் மாவட்​டத்தை சேர்ந்த ரயில் பயணி​கள், தெற்கு ரயில்​வேக்கு தொடர்ந்து மின்​னஞ்​சல் அனுப்பி வரு​கின்​றனர். கடந்த வாரத்​தில் மட்​டும் 150-க்​கும் மேற்​பட்​டோர் தலைமை அலு​வல​கத்​துக்கு மின்​னஞ்​சல் அனுப்பி உள்​ளனர்.


இது குறித்​து, திரு​வள்​ளூர் மாவட்ட பயணி​கள் சங்க நிர்​வாகி​கள் கூறிய​தாவது: திரு​வள்​ளூர் ரயில் நிலை​யம் வழி​யாக செல்​லும் 60 ரயில்​களில், மங்​களூர் மெயில், காவேரி, திருப்​ப​தி, மும்​பை, ஏலகிரி, மைசூர் உட்பட 11 விரைவு ரயில்​கள் மட்​டுமே நின்று செல்கின்​றன.


இது போது​மான​தாக இல்​லை. கோவை, பெங்​களூரு, காச்​சிக்​கு​டா, நீல​கிரி, திரு​வனந்​த​புரம் உட்பட 9 விரைவு ரயில்கள் நின்று செல்ல அனு​ம​திக்​கக் கோரி தெற்கு ரயில்​வேக்கு மின்​னஞ்​சல் அனுப்பி வரு​கிறோம். எங்​கள் கோரிக்கை நிறைவேறும் வரை​யில் பொதுநல சங்​கங்​கள், பொது​மக்​கள், மாணவர்​கள், வியா​பாரி​கள் என அனைத்து தரப்​பினரும் தொடர்ந்து மின்​னஞ்​சல் அனுப்ப இருக்​கிறோம்.


1,000 மின்​னஞ்​சல்​களை அனுப்ப இலக்கு வைத்து உள்​ளோம். மக்​களின் தேவையை கருத்​தில் கொண்​டு, திரு​வள்​ளூரில் கூடு​தல் ரயில்​களுக்கு நிறுத்​தம் வழங்க வேண்​டும். இவ்​வாறு அவர்​கள் கூறினர். இது குறித்​து, சென்னை ரயில்வே கோட்ட அதி​காரி​கள் கூறும்​போது, “இந்த கோரிக்​கையை ஆய்வு செய்​து, அடுத்​தகட்​ட நடவடிக்​கை எடுக்​கப்​படும்​”என்றனர்​.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%