துணைக் கருவி

துணைக் கருவி



   " இரவு முழுவதும்

      சுகம் தரும்

      பாய் தலையணை

      போர்வை

      விடிந்ததும்...."


      ஓரம் கட்டி

      வழிவிட்டு

      அடுத்த இரவு

      வரும் வரை

      காத்திருப்பு

      பட்டியலில்

      நிற்கிறது...."


      தலைக்கு இதம்

      உடலுக்கு ஓய்வு

      கட்டி அனைக்க

      குறையும் கை

      கால் வலி .... "


       இரவு முழுவதும்

       கனவையும் 

       அற்புதமான

       உறக்கத்தையும்

       அள்ளித் தருகிறது

       படுக்கை விரிப்புக்கள் ..."


        குன்றிய இரவு

        வெளிச்சமும்

        மெத்தை மிடுக்கும்

        சுண்டி இழுக்கிறது..."


        சுகத்தை மட்டும்

        தந்து விட்டு

        ஓரம் கட்டப்படும்

        போது ஒப்பாரி

         வைக்காமல் ..."


         அடுத்த வாய்ப்புக்கு

         தன்னை வாரித்

         தந்திட தயாராய்

         இருக்கும் படுக்கை

          ஆபரணங்கள்

          என்றும் சுகமே ..."


         துணைக் கருவி

         என்றும் மனிதனின்

          தூக்க மருந்து

          அழகிய விரிப்பு .... "


      - சீர்காழி .ஆர். சீதாராமன்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%