(டிசம்பர் 5 உலக மண் நாள்)
..........
உனக்குத்தான் எத்தனை பெயர்கள் ?
பூவாம்; காயாம் ; கூவாம்; கோவாம்!
உனக்குத்தான் எத்தனை ஓரவஞ்சனை!
உழுபவன் வீசினில்
அன்பளிப்பு தருகிறாய்,
உதவாதென வீசினால் .
அழித்து விடுகிறாய் !
உனக்குத்தான் எத்தனை பெரிய மனம்!
அகழ்வாரைத் தாங்குகிறாய்,
அசிங்கத்தையும் தாங்குகிறாய்!
உனக்குத்தான் எத்தனை
தயாள குணம்!
உயிரினங்களுக்கு
உன்மடி உறைவிடம்,
அலையும் நீருக்கும்
மலைக்கும்
உன்னடி புகலிடம் .
எத்தனை திருட்டுகள்
செய்கிறாய் மண்ணே!
விலைமதிப்பானதை மறைத்துவைக்கிறாய்
தோண்டி எடுத்தால்
தந்துவிடப் போகிறாய் !
சினம் கொண்டு ஆடுகிறாய் !
சிதைக்கவும் செய்கிறாய் !
மனித இன
நகரங்களைத்
தாழிட்டுப்புதைக்கிறாய்;
புதைந்த பெருமைகளை
வெளிக்காட்டிச் சிரிக்கிறாய் !
உன்னால்தான் பேசப்படுகிறது
என்ஊர் பெருமை ;
என் இனத்தலைமை ;
என்னவர் வீரம்;
என்னுள் வீசுகிறது
உன் மொழி வாசம்!
தவழ்ந்தால்
தாங்கிக் கொள்கிறாய் !
விழுந்தால் தட்டிக் கொடுக்கிறாய்!
எழுந்தால்
உயர்த்தி விடுகிறாய் !
படுத்துவிட்டாலோ
உறங்க வைக்கிறாய்
என் பிறப்பும்
என் இறப்பும் உன்னிடம் !
என்வாழ்வும்
என் வளர்ச்சியும்
உன்னிடம் !
ஆவதும் மண்ணாலே அழிவதும்
மண்ணாலே இயற்கையே! இறையே !
மண்ணைப் போற்றுதும்! மண்ணைப் போற்றுதும்!!
மண்எனும்மாமணியே உன்னைப் போற்றுதும்!

திருமதி. இரா.இராஜாமணி
ஈரோடு
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?