அழுத - கண்ணீர் !

அழுத - கண்ணீர் !

கவிஞர் இரா .இரவி !


உலக மக்கள் யாவரின் கண்ணிலும் 

ஒரு சொட்டு கண்ணீர் கூட வரக்கூடாது !


ஏழை எளியோரின் துயர் களைய வேண்டாம்  

எந்தவித வேறுபாடு இன்றி சமத்துவம் வேண்டும் !


வன்முறை எங்குமின்றி ஒழிய வேண்டும்

வளமான உலகம் வசப்பட வேண்டும் !


ஆதிக்கம் எங்கும் இருக்கவே கூடாது 

அடிமைத்தனமும் எங்கும் கூடாது !


எல்லோருக்கும் எல்லாம் கிடைத்திட வேண்டும் 

ஏற்றத்தாழ்வுகள் உடன் களைந்திட வேண்டும் !


கியூபா நாடு போலவே உலகம் எங்கும் 

கல்வி என்பது அரசுடைமையாகிட வேண்டும் !


தனியாரின் ஆதிக்கம் அகற்றிட வேண்டும் 

தண்ணீர் ஓடிடும் நதிகள் பொதுவாக வேண்டும் !


மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும்

மனிதனை மனிதன் மதித்திட வேண்டும் !


ஆணாதிக்க சிந்தனை அழிந்திட வேண்டும் 

அன்பாகப் பெண்ணை மதித்திட வேண்டும் !


உயர்வு தாழ்வு சாதியில் இல்லை என்ற 

உயர்ந்த எண்ணம் மனதினில் வேண்டும் !


தனியுடைமைக் கொள்கை ஒழிய வேண்டும் 

பொதுவுடைமைக் கொள்கை மலர வேண்டும் !

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%