துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவ மழையையொட்டி அமைக்கப்பட்டுள்ள மைய சமையல் கூடம் மற்றும் தற்காலிக நிவாரண மையங்களில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து இன்று அதிகாலையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.


தொடர்ந்து, சிந்தாதிரிப்பேட்டை அய்யா தெருவில் உள்ள மைய சமையல் கூடத்தில் உணவு தயாரிக்க தேவையான கட்டமைப்பு வசதிகள் தயார் நிலையில் இருப்பதையும், சிந்தாதிரிப்பேட்டை மேற்கு கூவம் சாலையில் உள்ள சென்னை உயர்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண மையத்தில் பொதுமக்கள் தங்குவதற்கு தேவையான பாய், தலையணை உள்ளிட்டவை தயாராக இருப்பதையும், அடிப்படை வசதிகள் குறித்தும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


பின்னர், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அண்ணா சாலை – ஜி.பி.சாலை சந்திப்பு பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள மழைநீர் வடிகால் கட்டுமான பணிகளையும் அவர் ஆய்வு செய்தார்.


இதேபோல ராஜலட்சுமிநகர், அடையாறு காமராஜ் அவின்யூ முதல் தெருவில் சமையல் கூடத்தையும் ஆய்வு செய்தார்.


இந்த ஆய்வுகளின்போது வடகிழக்கு பருவமழை காலத்தில் பெய்யும் கனமழையை பொதுமக்கள் எதிர்கொள்ள தேவையான உதவிகளையும், பணிகளையும் அர்ப்பணிப்பு உணர்வுடன் மேற்கொள்ள அனைத்து துறை அலுவலர்களுக்கும் துணை முதலமைச்சர் அறிவுறுத்தினார்.


இந்த ஆய்வுகளில் சென்னை மாநகராட்சி மத்திய வட்டார துணை ஆணையர் எச்.ஆர். கெளஷிக், வடக்கு வட்டார துணை ஆணையர் கட்டா ரவி தேஜா, துணை ஆணையர் (வருவாய்) எம்.பிரித்வி ராஜ், மண்டல அலுவலர் டி.விஜய்பாபு மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


இதேபோல வேளச்சேரி பறக்கும் ரெயில் திட்ட சாலைப் பகுதியில் கால்வாய் தூர்வாரப்பட்டுள்ளதால் அப்பகுதி பாலத்தின் 6 கண்கள் வழியே நீர் தடையின்றி செல்வதையும்


சென்னை சோழிங்கநல்லூர் நாராயணபுரம் ஏரியிலிருந்து பள்ளிக்கரணை சதுப்பு நிலம் வரை 44 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5 கண் நீர் ஒழுங்கியுடன் 850 மீ. நீளத்தில் 1,100 கன.அடி வெள்ள நீர் கடத்தும் திறனுடைய இரண்டு கண் கொண்ட கூடுதல் பெரு மூடு வடிகால்வாய் அமைக்கப்பட்டதால் நீர் தடையின்றி செல்வதையும்


சோழிங்கநல்லூர் பகுதியில் கீழ்கட்டளை உபரி நீர் கால்வாயில் ராட்சத இயந்திரங்களைக் கொண்டு தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படுவதையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


வீராங்கல் ஓடைப் பகுதியில்


வீராங்கல் ஓடையில், ரூ.5.60 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ள தூர்வாரும் பணிகள், ஓடையின் கரையோரங்களில் 1 மீட்டர் உயரத்திற்கு அமைக்கப்பட்டுள்ள தடுப்புச்சுவர், ஓடைக்குள் குப்பைகள் தேங்காமல் இருக்க, தடுப்பு சுவருக்கு மேல் 1.60 மீட்டர் அளவுக்கு கம்பி வலை அமைக்கப்பட்டுள்ளதையும்,


ஆதம்பாக்கம் கக்கன் பாலம் அருகே வெள்ளநீரை வெளியேற்ற 100 ஹெச்.பி திறனுடைய மேட்டார் பம்ப் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%