வால்பாறை அருகே அட்டகாசம் செய்த ஒற்றைக் கொம்பன் காட்டு யானை: மீண்டும் காட்டுக்குள் விரட்டினர் கேரள போலீசார்
Oct 23 2025
17

வால்பாறை, அக். 22–
வால்பாறை அருகே தொடர் அட்டகாசத்தில் கபாலி ஒற்றை கொம்பன் யானையை கேரளா வனத்துறையினர் வன பகுதிக்குள் விரட்டினர்.
கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து காட்டு யானை கூட்டங்கள் அதிக அளவில் கேரளா வனப்பகுதியில் இருந்து இடம் பெயர்ந்து வருகிறது, யானைகள் கூட்டமாகவும் ஒற்றை யானைகள் அதிகளவில் உலா வருகிறது.
மேலும், தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்புப் பகுதிகள் மற்றும் சாலைகளில் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது.
தொடர்ந்து, யானைகளை வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் தொடர்ந்து கண்காணித்து அடர் வனப் பகுதிக்குள் விரட்டி வருகின்றனர்.
இந்நிலையில், வால்பாறை அருகே உள்ள அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி சாலக்குடி செல்லும் சாலை மழுகுப்பாறை அம்பலபாரா என்ற இடத்தில் வந்த அரசு பேருந்து செல்ல விடாமல் சாலையில் மரங்கள் இழுத்துப்போட்டு அட்டகாசத்தில் ஈடுபட்ட கபாலி யானையைக் கண்டு பேருந்து உள்ளே இருந்த பயணிகள் அச்சத்துடன் இருந்தனர்.
தகவல் அறிந்து வந்த கேரளா வனத்துறையினர் கபாலி ஒற்றை கொம்பன் யானையை வன பகுதிக்குள் விரட்டினர். இதை அடுத்து அரசு பேருந்து பத்திரமாக வால்பாறை வந்து அடைந்தது. கடந்த சில தினங்களாக இந்த யானை சுற்றுலா செல்லும் வாகனங்களை தாக்கியும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது என குறிப்பிடத்தக்கது
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?