ரஷ்ய எண்ணெய் வாங்குவதை குறைத்த இந்தியா: மோடியுடன் பேசிய டிரம்ப் தகவல்
Oct 23 2025
19

வாஷிங்டன், அக். 22–
பிரதமர் மோடியை தொடர்பு கொண்டு பேசியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும், ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்த மோடி விரும்புவதாகவும், ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா குறைத்து வருவதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டனில் செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப் மோடியுடன் தொலைபேசியில் பேசியது குறித்து தெரிவித்ததாவது:
“இந்திய மக்களை நான் நேசிக்கிறேன். நம் நாடுகளுக்கு இடையே சில சிறந்த ஒப்பந்தங்களை மேற்கொள்ள நாங்கள் பணியாற்றி வருகிறோம். இன்று நான் பிரதமர் மோடியுடன் பேசினேன், எங்களுக்குள் நல்ல உறவு உள்ளது. அவர் ரஷ்யாவிலிருந்து அதிக எண்ணெய் வாங்கப் போவதில்லை. நான் விரும்புவது போல், ரஷ்யா - உக்ரைன் போர் முடிவடைவதைக் காண அவரும் விரும்புகிறார். ரஷ்யாவிடம் இருந்து இந்தியா அதிகமாக எண்ணெய் வாங்கப் போவதில்லை. எண்ணெய் கொள்முதலை அவர்கள் வெகுவாகக் குறைத்துள்ளனர், மேலும் தொடர்ந்து அதைக் குறைத்து வருகின்றனர்.” எனத் தெரிவித்துள்ளார்.
அதிபர் டிரம்ப்புடன் பேசியதை உறுதிசெய்துள்ள மோடி, சமூக ஊடகத்தில் தெரிவித்திருப்பதாவது:
”தொலைபேசியில் அழைத்து தீபாவளி வாழ்த்து தெரிவித்த அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு நன்றி. இந்த தீப ஒளித் திருநாளில், நமது இரண்டு பெரும் ஜனநாயக நாடுகளும் உலகை நம்பிக்கையுடன் ஒளிரச் செய்து, பயங்கரவாதத்திற்கு எதிராக ஒற்றுமையாக நிற்போம்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?