துன்பம் வாராமல்

துன்பம் வாராமல்


குழந்தைப் பாட்டு

(இசைப் பாடல்)


துன்பம் வாராமல்

பார்த்துக்கொள்....பாப்பா

இன்பம் நெஞ்சினிலே

சேர்த்துக்கொள்!

அன்பு நிறைந்திடவே

கேட்டுக்கொள்..பாப்பா

ஆசை குறைத்திடவே

ஏற்றுக்கொள்!

         ...(துன்பம்)


சோர்வு வாராமல்

பார்த்துக்கொள்..பாப்பா

ஆர்வம் தன்னைநீ

சேர்த்துக்கொள்!

கூர்மை அறிவுதனை

ஈட்டிக்கொள்..பாப்பா

சீர்மை ஒற்றுமையைக்

கூட்டிக்கொள்!

             .(துன்பம்)


குழப்பம் வந்தாலே

தீர்த்துக்கொள்..பாப்பா

ஒழுக்கம் எந்நாளும்

பூட்டிக்கொள்!

இழுக்கம் சேராமல்

காட்டிக்கொள்..பாப்பா

உழைப்பைப் போற்றிடவே

ஏற்றுக்கொள்!

               (துன்பம்)


*முனைவர்*

*இராம.வேதநாயகம்*

திருவண்ணாமலை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%