எண்சீர் மண்டிலம்.
விளக்கேற்று விளக்கேற்று
வினைகள் மாயும்
விதிமேலே பழிபோட்டு
நின்றி டாதே!
களிப்போடு விளக்கேற்று
காலம் மாறும்
கலைமிளிர விளக்கேற்று
கோல மாகும்!
உளமார விளக்கேற்று
ஊரே போற்றும்
உன்னதமாய்க் கண்டிடுமே
பாரே போற்றும்!
ஒளிமிளிர விளக்கேற்று
ஒண்மை யாகும்
ஒற்றுமைக்கு வழிகூட்டும்
விளக்கை ஏற்று!
அகலாத துன்பங்கள்
அகன்றே ஓடும்
அன்பான இன்பமெலாம்
தகவாய்க் காணும்!
வகையான நன்மையெலாம்
வந்து சேரும்
வண்ணவண்ண விளக்கேற்று
இருளே போகும்!
அகல்கொண்டு விளக்கேற்று
அன்பே ஆகும்
அருளோடு விளக்கேற்று
பண்பே ஆகும்!
இகலெல்லாம் பறந்தோடும்
விளக்கை ஏற்று
ஈடில்லாப் புண்ணியமும்
வந்து சேரும்!
*முனைவர்*
*இராம.வேதநாயகம்*
திருவண்ணாமலை.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?