
சென்னை:
சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திடீரென மயங்கி விழுந்தார். இதில் அவருக்கு கையில் காயம் ஏற்பட்ட நிலையில், மயங்கி விழுந்த அமைச்சர் துரைமுருகனை மீட்டு மருத்துவமனை யில் அனுமதித்தனர். அங்கு அவரை மருத்துவர்கள் பரிசோ தனை செய்ததில் அமைச்சர் துரைமுருகனுக்கு தோள்பட்டை எலும்பில் லேசான சிராய்ப்பு ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப் பட்டது. தொடர்ந்து லேசான காயம் காரணமாக துரைமுருக னுக்கு கையில் கட்டு போடப்பட்டது. மேலும் மூன்று நாட்கள் தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மருத்துவமனை யில் இருந்து வீடு திரும்பி ஓய்வு எடுத்து வருகிறார். இந்நிலையில், அமைச்சர் துரைமுருகனை முதல மைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார். மேலும் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்தும் கேட்டறிந்தார். முதலமைச்சருடன் அமைச்சர் எ.வ.வேலு உடனிருந்தார்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?