தூக்கமும் துன்பமும்

தூக்கமும் துன்பமும்


பிறப்போ ஒருமுறையே

பீடுற வாழ்ந்திடுவோம்!

இறப்போ ஒருமுறையே

இனிமையில் சூழ்ந்திடுவோம்!


தூக்கமோ தொடர்வதுண்டு

துன்பமும் தொடர்வதுண்டு!

நோக்கமே நிறைவேற

நிம்மதி தேடிவிடு!


வாழ்க்கையே தொடர்கதைதான்

வாழ்வதும் ஒருமுறைதான்!

ஆழ்ந்துநீ சிந்திப்பாய்

அன்பையே சந்திப்பாய்!


தொடர்கதை ஒருநாளில்

சோர்ந்துபோய் முடிந்துவிடும்!

அடக்கமே ஆகும்வரை

அடக்கமாய் வாழ்ந்திடுவோம்!


*முனைவர்*

*இராம.வேதநாயகம்*

திருவண்ணாமலை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%