தென்தமிழ்நாட்டில் சிக்கலான ரத்தநாள கோளாறுக்கு நவீன 'ஹைபிரிட்' சிகிச்சை அளித்து மதுரை அப்பல்லோ மருத்துவமனை சாதனை

தென்தமிழ்நாட்டில் சிக்கலான ரத்தநாள கோளாறுக்கு  நவீன 'ஹைபிரிட்' சிகிச்சை அளித்து மதுரை அப்பல்லோ மருத்துவமனை சாதனை



தென்தமிழகத்தில் முதன்முறையாக அரிதான மற்றும் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய சிக்கலான ரத்தநாள கோளாறுக்கு, 'ஹைபிரிட் ரீவாஸ்குலரைசேஷன்' முறையில் சிகிச்சை அளித்து மதுரை அப்பல்லோ சிறப்பு மருத்துவமனை சாதனை செய்துள்ளது.


நாட்பட்ட குரல் கரகரப்புடன் அனுமதிக் கப்பட்ட புதுக்கோட்டையைச் சேர்ந்த 50 வயது நபருக்கு, வேறொரு மருத்துவமனையில் நுரையீரல் புற்றுநோய் எனத் தவறாகக் கண்டறியப்பட்டது. சி.டி. ஸ்கேன் பரிசோதனையில், அவரது மார்பு மகாதமனியில் (Thoracic Aorta) இடது குரல்வளை நரம்பை அழுத்தியதால் குரல் நாண் பக்கவாதம் ஏற்படுத்திய ஒரு ரத்தநாள கோளாறு (Aneurysm) இருப்பது கண்டறியப்பட்டது. இது உயிருக்கு ஆபத்தான அசாதாரண நிலையாகும்.


முழுமையாக குணம்:


இந்த அவசர நிலையைக் கருதி, ரத்தநாள சிகிச்சை நிபுணர் குழுவினர், மேம்பட்ட ஹைபிரிட் ரீவாஸ்குலரைசேஷன் (Hybrid Revascularization) நடைமுறையைத் திட்டமிட்டனர். இதில் பைபாஸ் அறுவை சிகிச்சை (Left Carotid Subclavian Bypass Surgery) மற்றும் எண்டோவாஸ்குலர் அயோர்டிக் ரிப்பேர் (Thoracic Endovascular Aortic Repair - TEVAR) ஆகிய இரண்டும் இணைக்கப்பட்டன. இந்த ஒருங்கிணைந்த செயல்முறையின் மூலம், ஸ்டென்ட் கிராஃப்ட் பொருத்தப்பட்ட பிறகும், கைகளுக்கு ரத்த ஓட்டம் கிடைப்பது உறுதி செய்யப்பட்டது. ஒரு மாதகால தொடர் பரிசோதனையில், அனூரிசம் (ரத்தநாள கோளாறு) முழுமையாக உறைந்து ரத்தக்கசிவு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டு, நோயாளி முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பினார்.


மூத்த நுரையீரல் சிகிச்சை நிபுணர் டாக்டர் எம்.பழனியப்பன், குரல் கரகரப்பு போன்ற அறிகுறிகளை அலட்சியப் படுத்தாமல் ஆரம்பக்கட் டத்திலேயே கண்டறிந்ததன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். ரத்தநாள அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கே.எஸ்.வெங்கட பிரசன்னா, இந்த ஒருங்கிணைந்த ஹைபிரிட் சிகிச்சை அணுகுமுறை அனூரிசத்தை பாதுகாப்பாக விலக்கி வைக்கும் அதே வேளையில், அருகில் உள்ள சப்க்ளேவியன் தமனியைப் பாதுகாக்கவும் உதவியது என்றார்.


மருத்துவ சேவைகளின் இணை இயக்குனர் டாக்டர் கே.பிரவீன் ராஜன் "அப்போலோ சிறப்பு மருத்துவமனைகளில், மருத்துவ சிறப்பின் எல்லைகளை விரிவுபடுத்தும் எங்கள் அர்ப்பணிப்பு அசைக்க முடியாதது. இது போன்ற சிகிச்சையில் அறுவை சிகிச்சை நிபுணத்துவத்துடன் அதிநவீன தொழில்நுட்பத்தை ஒருங்கிணைப்பதன் மூலம் சிறந்த மருத்துவ சிகிச்சையை வழங்க முடியும். இந்த வெற்றியின் மூலம் சிக்கலான ரத்தநாள சிகிச்சைகளுக்கு புதுமையான, உயிர்காக்கும் சிகிச்சைகளை வழங்குவதில் மதுரை அப்போலோ மருத்துவமனை சிறந்து விளங்குவதில் பெருமை அளிக்கிறது என்று கூறினார்.


அப்போலோ மருத்துவமனைகளின் தலைமை இயக்க அதிகாரி டாக்டர் நிகில் திவாரி கூறியதாவது:-


“இந்த முன்னோடி அறுவை சிகிச்சைகள் உலகத் தரம் வாய்ந்த அதிநவீன மருத்துவ சிகிச்சையை வழங்கும் எங்கள் நோக்கத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. எங்கள் மருத்துவர்களின் கைதேர்ந்த நிபுணத்துவத்தை சமீபத்திய தொழில் நுட்பத்துடன் இணைப்பதன் மூலம், அறுவை சிகிச்சை சிறப்பில் இது போன்ற சாத்தியக்கூறுகளை நாங்கள் தொடர்ந்து மறுவரையறை செய்கிறோம். அப்போலோ சிறப்பு மருத்துவமனை, மதுரை, அதிநவீன மருத்துவ முன்னேற்றங்களுக்கு முன்னோடியாகவும், நோயாளிக்கு மிக உயர்ந்த தரமான மருத்துவ பராமரிப்பை உறுதி செய்வதற்கும் கடமைப்பட்டுள்ளது என்றார்.


இந்த செய்தியாளர் சந்திப்பில் அப்போலோ மருத்துவமனை, மதுரை மண்டலத்தின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் நிகில் திவாரி, மருத்துவ சேவைகளின் இணை இயக்குனர் டாக்டர் கே.பிரவின்ராஜன், மூத்த நுரையீரல் நோய் நிபுணர் டாக்டர் எம்.பழனியப்பன், இரத்தநாள அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கே.எஸ்.வெங்கட பிரசன்னா ஆகியோர் கலந்து கொண்டனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%