தேவகோட்டை ஒன்றியத்தில் தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி

தேவகோட்டை ஒன்றியத்தில் தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி



சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ஒன்றியத்திற்குட்பட்ட மாவிடுதிக் கோட்டை ஊராட்சியில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில்புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது.


சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை ஊராட்சி ஒன்றியத்திற் குட்பட்ட மாவிடுதிக்கோட்டை ஊராட்சியில் 9.12.2025 அன்று செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது. இப்புகைப்படக் கண்காட்சியில் தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கிய புகைப்படங்கள், அமைச்சர் பெருமக்கள் மற்றும் கலெக்டர் ஆகியோர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாக்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய புகைப்படங்கள் இடம் பெற்றன.


மேலும், இக்கண்காட்சியில் அரசு திட்டங்கள் குறித்தும், நலத்திட் டங்களை எவ்வாறு பெறுவது, யாரை அணுகி பெறவேண்டும் என்பது குறித்தும் பொதுமக்களுக்கு அலுவலர்களால் விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டது. புகைப்படக் கண்காட்சியை பார்வையிட்ட பொதுமக்கள் தமிழக அரசு செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து தெரிந்து கொள்ளவும், நலத்திட்ட உதவிகளை யாரை அணுகிப் பெறவேண்டும் என்பது குறித்து அறிந்து கொள்வதற்கும் வசதியாக இப்புகைப்படக் கண்காட்சி பெரிதும் உதவியாக இருந்தது என பொதுமக்கள் தெரிவித்தனர். இதுபோன்று, பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் அரசின் சார்பில் நடத்தப்படும் தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியினை பார்த்து, அரசின் திட்டங்கள் குறித்து அறிந்து கொண்டு பயன்பெறவேண்டும்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%