கோவை, அக். 23–
கோவை தொண்டாமுத்தூர் குப்பேபாளையம் அருகே மின்சாரம் பாய்ந்து சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் யானை உயிரிழந்துள்ளது.
கோவை தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் வனப் பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் விவசாய நிலம் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்குள் உலா வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சுமார் 25 வயது ஆண் காட்டு யானை ஒன்று தொண்டாமுத்தூர் அடுத்த குப்பேபாளையம், ராமன் குட்டை என்ற பகுதியில் உள்ள நாகராஜன் என்பவரது தோட்டத்திற்குள் புகுந்தது. அப்போது தோட்டத்தில் மின்வாரியத்தால் அமைக்கப்பட்டஉயர் மின் அழுத்த கம்பத்தை யானை முட்டித் தள்ளியது. இதில் கீழே விழுந்த உயர் மின்னழுத்த மின் கம்பி பட்டதில், மின்சாரம் பாய்ந்து காட்டு யானை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.
தோட்டத்து உரிமையாளர் அதிகாலை 5 மணி அளவில் பார்த்து தகவல் அளித்ததின் பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் யானைக்கு பிரேதப் பரிசோதனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு விவசாயத் தோட்டத்திற்குள் புகுந்து விவசாயிகளை அச்சுறுத்தி வந்த ரோலக்ஸ் என்ற காட்டு யானை பிடிக்கப்பட்டு இடமாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?