தொழிலாளர் சட்ட தொகுப்புகளை கண்டித்து புதுச்சேரியில் எழுச்சிமிகு பேரணி, ஆர்ப்பாட்டம்

தொழிலாளர் சட்ட தொகுப்புகளை கண்டித்து புதுச்சேரியில் எழுச்சிமிகு பேரணி, ஆர்ப்பாட்டம்

தொழிலாளர் சட்டங்களை 4 தொகுப்புகளாக மாற்றி தொழிலாளர்களின் உரிமைகளை பறித்துள்ள பாஜக அரசை கண்டித்து புதுச்சேரியில் திங்களன்று (டிச.8) பெருந்திரள் ஆர்ப்பாட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது. புதுச்சேரி தலைமை செயலகம் நோக்கி நேரு வீதியில் நடைபெற்ற பெருந்திரள் ஆர்ப்பாட்டத்திற்கு, சிபிஐ மாநில செயலாளர் சலீம், சிபிஎம் மாநில குழு ஒருங்கிணைப்பாளர் பெருமாள், சிபிஐஎம்எல் மாநில செயலாளர் பாலசுப்பிரமணியன், விசிக மாநில நிர்வாகி தலையாரி ஆகியோர் கூட்டாக தலைமை தாங்கினர். இடதுசாரி கட்சிகள், விடுதலை சிறுத்தை கட்சிகளின் தலைவர்கள் முருகன்,விஸ்வநாதன், கலைநாதன், ராஜாங்கம், கொளஞ்சியப்பன், சீனுவாசன், சத்தியா, தினேஷ்பொன்னையா, அந்தோணி, தேவப்பொழிலன் தமிழ்மாறன் உள்ளிட்ட திரளான மிஷின் வீதியில் இருந்து ஊர்வலமாக சென்றனர். அப்பொழுது காவல்துறையினர் தடுப்பு வேலிகளை அமைத்து, நேரு வீதியில் தடுத்து நிறுத்தினர். பின்னர் தடுப்புகளை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%