நடுக்கடலில் இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்: தமிழக மீனவர்களை தாக்கி ரூ.5 லட்சம் வலைகள், உபகரணங்கள் கொள்ளை

நடுக்கடலில் இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்: தமிழக மீனவர்களை தாக்கி ரூ.5 லட்சம் வலைகள், உபகரணங்கள் கொள்ளை

வேதாரண்யம், ஆக. 2–


நடுக்கடலில் தமிழக மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கி ரூ. 5 லட்சம் மதிப்பிலான வலைகளை பறித்துச் சென்றனர். கடற்கொள்ளையர்கள் தாக்கியதில் காயமடைந்த 3 மீனவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த வெள்ளப்பள்ளம் மீனவ கிராமத்தில் இருந்து 3 விசைப்படகுகளில் 14 பேர் கோடியக்கரைக்கு தென்கிழக்கே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு 4 படகில் இலங்கை கடல் கொள்ளையர்கள் வந்தனர். திடீரென அவர்கள் 3 படகையும் வழிமறித்து மீனவர்களை சரமாரியாக தாக்கி ரூ.5 லட்சம் மதிப்புள்ள மீன்பிடி வலைகள் மற்றும் உபகரணங்களை கொள்ளையடித்து கொண்டு தப்பி சென்றனர்.


இந்த கொடூர தாக்குதலில் மீனவர்கள் செல்வராஜ், மூர்த்தி, தனபால் ஆகிய 3 பேரும் பலத்த காயமடைந்தனர். அவர்களை உடன் வந்த சக மீனவர்கள் மீட்டு கரைக்கு திரும்பி நாகை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு மீனவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தொடர்ந்து தமிழக மீனவர்களை தாக்கி பொருட்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் கொள்ளையடித்து செல்லும் சம்பவம் அதிகரித்து வருவதால் மீனவர்கள் அச்சத்தில் உள்ளனர்.


உடனே இந்த சம்பவத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%