நட்பு

நட்பு

 


வானத்திலிருந்து பொழிகின்ற 

மழையைப் போல ,

பசுவின் மடியிலிருந்து 

கறக்கின்ற பாலைப் போல ,

பத்து மாதம் சுமந்த தாயின் 

நேசம் போல ,

உண்மையான நட்பும் தூய்மையானது .

இரத்தபந்தம் இல்லையென்றாலும் 

சொந்தமாக தெரியும் 

உயர்வு தாழ்வு வந்த போதும் 

உன்னை விட்டு கொடுத்து பேசாது 

அவன் ,அவள் என இனம் கடந்தும் 

மதம் ,சாதி என அடையாளம் கடந்தும் 

பேசுகின்ற மொழி கடந்தும் 

நேசிக்கும் பேரன்பே 

உண்மையான நட்பு .

ஒரு உண்மையான நட்பு 

ஆயிரம் உறவுகளை விட மேலானது ..

இவ்வையகத்தில் சில இடங்களில் 

காற்று இல்லாமல் இருக்கலாம் 

அட அந்த காதல் இல்லாமலும் இருக்கலாம் -ஆனால் 

நட்பில்லாமல் உலகேது .

உயிர்கள் அனைத்துக்குமே கடவுளே துணை 

எனக்கோ நட்பே துணை !



நௌஷாத் கான் .லி 

கும்பகோணம்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%