நல்ல பண்புகள்

நல்ல பண்புகள்



நூலக வாசிப்பு


சிந்தையும் சிந்தனையும்

 ஓரிடத்தில் சங்கமமாய் 


பலப்பேர் கருத்தறியும் 

பகுத்தறிவு பரிமாற்றமாய்


 சாமானியனை சாதனையாளனாய் 

மாற்றும் ஆளுமையாய் 


தன்மான உணர்வை

 தட்டியெழுப்பும் புரட்சியாய்


 புதுயுகம் படைக்க 

தூண்டும் தூண்டுகோலாய் 


தனிமனிதனில் பொதுநலம் 

போதிக்கும் சமூகமாய் 


கற்க கற்க அறிவூறும்

 மணற்கேணியாய் 


துன்பத்தை போக்கி

 நகைப்பூட்டும் நண்பனாய்


 இன்பத்தையும் இளமையும் 

பரிசளிக்கும் வாரணமாய் 


வாசிப்பின் நேசிப்பில்

 மனம் மந்தகாசமாய் 


மனமகிழ்வில் இறக்கை

விரித்தாடும் புள்ளினமாய்


 எங்கும் எப்போதும் 

வழிகாட்டும் கலங்கரையாய்


 உலகையாளும் திறனை

 உருவாக்கும் மாற்றமாய்


 புத்தக வாசிப்பில்

 மூழ்கும் தவமாய்


 படித்ததை திறனாயும்

 திறவுகோலே வரமாய் 


நலந்தர வந்தாயே 

நூலகமென்னும் வரமாய்



 சு .பழனியம்மாள் ஆசிரியர் 

செல்லம்பட்டி

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%