
வேட்டுச் சத்தம் விண்ணைப் பிளக்க..
விடியக்காலை எண்ணை தேய்த்து.. நாட்டுக்குள்ளே தீபாவளி.. நல்லா இங்கே வந்ததுங்கோ!
ஏழைக்கு என்றோ? தீபாவளி ஏழைக்கு உண்டோ?
சரிகைச் சேலை மின்னுது அங்கே.. சாயச்சேலை ஏங்குது இங்கே.. நகை மழையில் நனையுது அங்கே.. ஒழுகும் வீட்டில் பாத்திரம் இங்கே.!
கேழ்வரகில் நெய்வடிந்தாலும்.. கேட்பது யாரு? உழுதவனின் வீட்டில் என்றோ பண்டிகைக் கூறு!
புது பண்டிகையில் பலகாரம்.. மதுக் கடையினில் இவன் பாரம்!
ஏழைக்கு என்றோ? தீபாவளி.. ஏழைக்கு உண்டோ..!
(வேட்டுச்சத்தம்...)
விளக்கின் வரிசை ஏற்றி வைப்போம்.. வேதனையை மாற்றி வைப்போம்.. வரிசையாக அமரவைத்து வயிற்றுப் பசியை தீர்த்து வைப்போம்! நரகாசுரன் என்பவன் யாரோ.? நம்முடைய மூடத்தனமே!
வதமே செய்வோம்! வாகைசூடுவோம்!..
ஏழைக்கு உண்டு.. இங்கு எல்லோரும் ஒன்று.. இதனைச் சொல்லும் திருநாள்தான் இன்று!
*வே.கல்யாண்குமார்.*
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?