நாதஸ்வரம் போட்டியில் முதல் பரிசு வென்ற மாணவிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு வாழ்த்து
Dec 07 2025
25
பள்ளிக்கல்வித்துறை சார்பில் சேலத்தில் மாநில அள விலான கலைத் திருவிழா-போட்டிகள் நடைபெற்றது. அதில், விருதுநகர் அருகே யுள்ள மல்லாங்கிணறைச் சேர்ந்த மாணவி வி.காவிய லட்சுமி நாதஸ்வரம் போட்டி யில் கலந்து கொண்டு முதல் பரிசினைப் வென்றார். இந்நிலையில் தமிழக நிதி, சுற்றுச்சூழல்-காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மாணவி காவியலட்சுமி மற்றும் அவரது குடும்பத்தினரை நேரில் அழைத்து வாழ்த்தினார். அப்போது மாணவி காவி யலட்சுமி, அமைச்சர் முன்னி லையில் நாதஸ்வரத்தில் பாரம்பரிய ராகங்களை இசைத்தார். அதை அமைச் சர் ரசித்து மகிழ்ந்தார். தமிழர்க ளின் பெருமைமிகு மரபுக் கலையான நாதஸ்வரத்தை இளம் வயதிலேயே இவ்வளவு திறம்பட கற்றுத்தேர்ந்து அதனை நயம்பட கையாளும் காவியலட்சுமிக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.அவர் இசைத் துறையில் மேலும் மேலும் வளர வேண்டுமெனவும் அமைச்சர் பாராட்டுத் தெரி வித்தார்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?