இராமநாதபுரம் பள்ளி மாணவர்களின் ஆய்வுக்கட்டுரைகள் தேர்வு
Dec 07 2025
29
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் தென்மண்டல குழந்தைகள் அறி வியல் மாநாடு கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இராமநாதபுரம், சிவகங்கை, தேனி, மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உட்பட 10 மாவட்டங்களில் இருந்து 160 நீர் மேலாண்மை சார்ந்த ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. இதில் இராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளில் இருந்து 10 ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. இராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து 4 பள்ளி மாணவர்களின் ஆய்வுக் கட்டு ரைகள் சிறந்த கட்டுரைகளாக தேர்வு செய்யப்பட்டன. தேர்வு செய்யப்பட்ட சிறந்த கட்டுரை களை டிசம்பர் 6,7 ஆகிய தேதிகளில் திண்டுக்கல்லில் நடைபெறும் மாநில அளவிலான மாநாட்டில் மாணவர்கள் சமர்ப்பிக்கின்றனர்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?