4 ஆண்டுகளில் தமிழகம் மகத்தான வளர்ச்சி: புதிய ஆலையை திறந்துவைத்து முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

4 ஆண்டுகளில் தமிழகம் மகத்தான வளர்ச்சி: புதிய ஆலையை திறந்துவைத்து முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்


 

சென்னை: ​காஞ்​சிபுரம் மாவட்​டம், பிள்​ளைப்​பாக்​கம், சிப்காட் தொழிற்​பூங்​கா​வில் அமெரிக்​காவைச் சேர்ந்த கார்​னிங் இன்​டர்​நேஷனல் கார்ப்​பரேசன் மற்​றும் இந்​தி​யா​வின் ஆப்​டிமஸ் இன்ஃப்​ரா​காம் நிறு​வனங்​களின் கூட்டு நிறு​வன​மான பாரத் இன்​னோவேட்​டிவ் க்ளாஸ் டெக்​னாலஜீஸ் நிறு​வனம், ரூ.1,003 கோடி முதலீட்​டில் 840 நபர்​களுக்கு வேலை​வாய்ப்பு அளிக்​கும் வகை​யில், மின்​னணு சாதனங்​களுக்​கான உலகத் தரம் வாய்ந்த முன் கவர் கண்​ணாடிப் பொருட்​கள் உற்​பத்தி தொழிற்​சாலையை நிறு​வி​யுள்​ளது.


இந்த தொழிற்​சாலையை நேற்று தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்​டா​லின், தொழிற்​சாலையை பார்வையிட்டார். அதன்​பின் அவர் பேசி​ய​தாவது: கடந்த ஆண்டு ஜனவரி​யில், இந்​தத் திட்​டத்​துக்​கான ஒப்​பந்​தம் போட்​டு, 17 மாதங்​களில் உற்​பத்தி தொடங்​கப்​பட்​டுள்​ளது.


ஆயிரத்​துக்​கும் அதி​க​மான புரிந்​துணர்வு ஒப்​பந்​தங்​கள் போடப்​பட்டு அதில், 80 சதவீதம் திட்​டங்​களை பல்​வேறு நிலைகளில் செயல்​பாட்​டுக்கு கொண்டு வந்​துள்​ளோம்.


இந்த வேக​மும், வெளிப்​படைத் தன்​மை​யும் தான் 4 ஆண்​டு​களில் எலெக்ட்​ரானிக்​ஸ், ஜிசிசி, ஆராய்ச்சி மற்​றும் மேம்​பாடு துறை​களில் மகத்​தான வளர்ச்​சியை தந்துள்ளது. எலெக்ட்​ரானிக்ஸ் துறை​யில் 14.65 பில்​லியன் டாலர் ஏற்​றும​தி​யுடன் நாட்​டிலேயே முதல் மாநில​மாக உள்​ளோம்.


ஒட்​டுமொத்த இந்​தி​யா​வின் எலெக்ட்​ரானிக்ஸ் ஏற்​றும​தி​யில் நமது பங்கு 41 சதவீத​மாகும். கடந்த நான்கு ஆண்​டு​களில், இந்த துறை​யில் 9 மடங்கு வளர்ச்​சியை அடைந்​துள்​ளோம்.


இதை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல, ரூ.440 கோடி முதலீட்​டில், மத்​திய அரசுடன் சேர்ந்து ‘மின்​னணு தயாரிப்பு தொகுப்​பு’ மேற்​கொள்​ளப்பட இருக்​கிறது. இதில், சூரிய ஒளி சார்ந்த கதிரியக்க சோதனை மையம் - மின்​சாதனங்​கள் சோதனை மையம் – மின்​னணு சான்​றிதழ் ஆய்​வகம் – பிசிபி வடிவ​மைப்​பு, விரை​வான மாதிரி தயாரிப்பு மையம் – திறன் மேம்​பாட்டு மையம் – தொழிலா​ளர் வீட்​டு வசதி உள்​ளிட்ட பல்​வேறு வசதி​கள் ஏற்​படுத்​தித் தரப்​படும். இவ்​வாறு அவர் பேசி​னார்.


நிகழ்​வில், அமைச்​சர் தா.மோ. அன்​பரசன், செல்​வப்​பெருந்​தகை எம்​எல்​ஏ, தொழில்​துறை செயலர்​ வி.அருண்​​ராய்​, தொழில்​ வழி​காட்​டி நிறுவன செயல்​ இயக்​குநர்​ பு.அலர்​மேல்​மங்​கை, ​மாவட்​ட ஆட்​சி​யர்​ கலைச்​செல்​வி மோகன்​ உள்ளிட்​டோர்​ பங்​கேற்​றனர்​.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%