news Breaking News
clock

நாற்காலி

நாற்காலி


வீட்டில் அறையின் ஓரத்தில் அமைதியால் நிற்கும் 

யார் வந்து அமர்ந்தாலும் ஏற்றுக்கொள்ளும் 

முதியவர் நினைவில் பழைய நண்பனாய் 

இருப்பதுடன் மழலைகளில் விளையாட்டில் பங்கு கொள்ளும்

ஓய்வு கொடுக்கும் ஒரு உன்னத நண்பன்

கனவுகள் இல்லா உலகத்தில் வாழ்பவன் 

ஒருநாள் மரமாக இருந்ததை என்றுமே நினைக்காதவன் 

இன்று நாற்காலியாக மாறியதில் மகிழ்ச்சியும் அடையாதவன்.

காலத்தில் என்ன மாற்றங்கள் வந்தாலும் ஏற்றுக் கொள்பவன்

எளிய வடிவில் அனைவருக்கும் எளிதாக கிடைப்பவன்


உஷா முத்துராமன்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News