காதலியே

காதலியே


-----------------------

காதலியே

படபடக்கும் இமைகளால் நீ

பார்த்த பரவசத்தில்

இதயப்பூங்காவில்

ஆயிரம் பட்டாம்பூச்சிகள்

பறக்கின்றன!


இதயத்தில் உன்

நினைவுகள்

இளமையை

வளமையாக்கி

முதுமைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது!


பருவத்தில் வருவதில்லை வசந்தம்

உன் உருவத்தில்

உலா வரும்

வண்ணக்கனவுகள்

வசந்தத்தின் சுவடுகளாய்!


வாஞ்சையோடு

கருமேகத்தை

பார்த்தாய்ப்பூமி

பசுமையானது

காந்தக்கண்ணால்

என்னையும் நோக்கினாய் இதயத்தில் மௌன மின்னலோடு

காதல் மழை!


நவரசத்தில்

புன்னகையின் புதையலே நீ அருகில்

இருக்கையில் தீவுகளாய்ப்பூக்கள்

சூழ்ந்ததுபோல்

காதல்வாசம் வீச மயக்கத்தில்

சொக்கிப் போகிறேன்!



கவிஞர் த.அனந்தராமன்

துறையூர்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%