
சாப்பாட்டு மேசையில் என் அண்ணன்:
நெகிழிப்பையிலிருந்து ..
உப்புமாவோ, வெண்பொங்கலோ;
ஏதோ ஒன்றை,
நடுங்கும் கைகளால்
விளம்பிக்கொண்டிருந்தவர் ;
என் அண்ணன் தானா!
திரும்பியே பார்க்காமல்;
நிழல் தட்டியதும்
யாரு? யாரு வந்திருக்கிறது; என்று குரல் கொடுக்க;
'நான்தான்'
என்று நான் சொல்ல,
'நான் என்றால் யார்?' என்று; நிமிர்ந்தவர்;
ஒருகணம் புரியாமல் திகைத்தார்.
'வா' என்று அழைக்காமல்;
'ஏது வந்திருக்கே?
சொல்லு;
சாப்பிடும் நேரமா, உனக்கு? சாப்பிடுகிறாயா?'
வயோதிகத்தின் முகமனை புரிந்து கொண்டது இன்னொரு வயோதிகம்...
நான்தான் அது
சசிகலா விஸ்வநாதன்
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%