நூறு நாள் வேலை வழங்கிடக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மாதர் சங்கம் மனு

நூறு நாள் வேலை வழங்கிடக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மாதர் சங்கம் மனு



திருவாரூர், அக். 27- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், நூறு நாள் வேலையை முழுமையாக வழங்கிட வேண்டும். நூறு நாட்கள் வேலையை நகர்ப்புறங்களுக்கும், பேரூராட்சிகளுக்கும் விரிவுபடுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மாவட்டச் செயலாளர் கலைச்செல்வி தலைமையில், திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. மேலும் திருவாரூர், மன்னார்குடி உள்ளிட்ட நகராட்சிப் பகுதிகளிலும் நூறு நாள் வேலை திட்டத்தினை நடைமுறைப்படுத்திட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்டத் தலைவர் ஜெகதீஸ்வரி, மாவட்டப் பொருளாளர் நிர்மலா, மாவட்டத் துணைத் தலைவர் சுலோச்சனா, மாவட்டத் துணைத் தலைவர் தனம் மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர்கள், நகரக்குழு நிர்வாகிகள் பலர், மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%