நாமக்கல், அக்.27- இராசிபுரத்தில் பட்ட பகலில் பொதுமக்களை அச்சு றுத்தும் வகையில் கஞ்சா போதையில் பட்டா கத்தியு டன் அச்சுறுத்தலில் ஈடுபட்ட இளைஞர்களின் வீடியோ வைரலானதை அடுத்து காவல் துறையினர் மூன்று பேரை கைது செய்தனர். நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் பட்டணம் சாலை யில் கஞ்சா போதையில் ஞாயிறன்று 5 இளைஞர்கள் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கத்தியுடன் சுற்றி வந்தனர். மேலும், பொது மக்களின் பாதுகாப்பிற் காக காவல் துறையினர் அமைத்த பேரிக்கார்டை உதைத்து கீழே தள்ளி அதன் மீது ஏறி மிதித்தனர். இதனைக்கண்ட பொதுமக்கள் பீதியில் பயந்து ஓடிய வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் னவரலா னது. இதனையடுத்து வீடியோ காட்சியின் அடிப்படை யில் வழக்கு பதிவு செய்த காவல் துறையினர், சம்பவத் தில் ஈடுபட்ட 5 பேரில் ரியாஸ்துன் (21), அஜ்புதீன் (20) மற்றும் பாபு (26) என்ற மூன்று பேரை ராசிபுரம் போலீசார் திங்களன்று கைது செய்தனர். பூபாலன் மற்றும் சுஜித் ஆகிய இருவர் தலைமறைவாகினர். இந்நிலையில் கைது செய்த மூன்று பேரையும் இராசி புரம் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்ட தில் அவர்கள் 5 பேரின் மீது ஏற்கனவே பல்வேறு வழக்கு கள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, இவர்கள் 5 பேர்களின் பெயர்களை இராசிபுரம் காவல் துறையினர் குற்றவாளிகள் பதிவேட்டில் பதிவு செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட மூவரையும் நீதிமன்ற காவல்துறையின் மூலமாக சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவான பூபாலன் மற்றும் சுஜித் ஆகிய இருவரையும் இராசிபுரம் காவல் துணை கண்காணிப்பா ளர் விஜயகுமார் தலைமையிலான காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?