சென்னை,அக்.27- சென்னையில் பல்வேறு இடங்களில் நடக்கும் மேம்பாலம் மற்றும் சாலை விரிவாக்கப் பணிகள் காரண மாக மக்கள் கடும் போக்குவரத்து நெரிசலை எதிர்கொள் கின்றனர். அடையாறு மத்திய கைலாஷ் சந்திப்பில் ரூ.60.68 கோடியில் 652 மீ நீள ‘L’ வடிவ மேம்பாலம் அமைக்கப் படுகிறது. 19 தூண்களில் 17 முடிந்துள்ளன. டிசம்பரில் பணி முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாதவரம்-நல்லூர் சுங்கச்சாவடி 10.3 கி.மீ பகுதியில் நாளொன்றுக்கு 80,000-95,000 வாகனங்கள் செல்கின்றன. நிலம் கையகப்படுத்தல் பிரச்ச னையால் இது 10 ஆண்டுகளாக நான்கு வழிச்சாலை யாகவே உள்ளது. பாடி-திருநின்றவூர் 22 கி.மீ சாலை விரிவாக்கம் 2012-ல் வணிகர் எதிர்ப்பால் கைவிடப்பட்டது. ரூ.1,893 கோடி மதிப்பிலான மாதவரம்-நல்லூர் மேம்பாலத் திட்டமும் நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது துறைமுகம்- மதுரவாயல் ரூ.5,570 கோடி மேம்பாலம் அமைக்கப்படுகிறது. பணிகள் நடப்பதால் பேரிகேட்டுகள் போடப்பட்டு சாலைகள்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?