சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கருணாநிதி அரங்கில் விருதுநகர் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலை வர் ராஜா சொக்கரின் இல்லத் திருமண விழா நடைபெற்றது. இதில் பங்கேற்று முதலமைச்சர் ஸ்டாலின் பேசுகையில், “சுயமரி யாதை திருமணத்துக்கு திமுக ஆட்சியில் சட்ட அங்கீகாரம் அளிக்கப்பட் டது. நாட்டு நலன் கருதி, தமிழகத்தின் வளர்ச்சிக் காக, அதையும் தாண்டி இந்திய நாட்டின் ஒற்று மைக்காக திமுகவும், காங்கிரசும் ஒரே அணி யில் அதே சிந்தனையு டன் தற்போது பயணித்துக் கொண்டிருக்கிறோம். இன்றைக்கு காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவ ராக விளங்கி கொண்டி ருக்கும் ராகுல், என் மீது தனிப்பட்ட முறையில் அன்பை காட்டுவார். அதனை என்னால் வார்த்தைகளால் சொல்ல முடியாது. என்னை எப் போது நேரில் பார்த்தா லும் மை டியர் பிரதர் என அழைப்பவர் ராகுல். நான் அவரை சகோதரர் என்பேன். என்னை தனது மூத்த அண்ண னாக ஏற்றுக்கொண்ட ராகுல் இந்திய மக்களின் குரலாக ஒலித்துக் கொண் டிருக்கிறார்” என்றார்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?