ஆதவ் அர்ஜூனா மனு குற்ற வழக்கு நீதிபதிக்கு மாற்றம்

ஆதவ் அர்ஜூனா மனு குற்ற வழக்கு நீதிபதிக்கு மாற்றம்



சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்த மனுவை குற்ற வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிக்கு அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரூர் சம்பவம் தொடர்பாக ஆதவ் அர்ஜூனா எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் வன்முறை தொடர்பான சில கருத்துகளைத் தெரிவித்திருந்தார். சிறிது நேரத்தில் அந்தப் பதிவை அகற்றிவிட்டார். ஆனால் இந்தப் பதிவின் அடிப்படையில் அவர் மீது சென்னை சைபர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் ஆதவ் அர்ஜூனா மனு தாக்கல் செய்தார். அதில், “எக்ஸ் தளத்தில் போடப்பட்ட பதிவை உடனடியாக நீக்கிவிட்டதாகவும், அந்தப் பதிவை போட்டதில் எந்த உள் நோக்கமும் இல்லை என்றும் தெரிவித்தார். முழுமையாகக் கவனிக்காமல் அவசரகதியில், எந்த அடிப்படையும் இல்லா மல் வழக்குப் பதிவு செய்யப்பட்டதாகவும், அரசியல் காழ்ப்பு ணர்ச்சி காரணமாக வழக்குப் பதிவு செய்யப்பட்டதாகவும்” கூறியிருந்தார். இந்த மனு மீதான விசாரணை திங்களன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. நவம்பர் 5 ஆம் தேதி நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் இந்த மனு மீதான விசாரணை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%