புஸ்ஸி ஆனந்தின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

புஸ்ஸி ஆனந்தின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி



சென்னை: கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்.27 ஆம் தேதி இரவு 7 மணி அளவில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கடுமையான கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் ஒட்டு மொத்த நாட்டையும் அதிர்ச்சி அடைய வைத்தது. இதில், தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீதான வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்ட நிலையில், முன்ஜா மீன் மனுவை வாபஸ் பெறுவதாக அவர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, தலைமை நீதிபதி அமர்வு இதற்கு அனுமதி அளித்து, அவருடைய முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%