நெல் கொள்முதல் பணி 10 நாளில் நிறைவு பெறும்’

நெல் கொள்முதல் பணி 10 நாளில் நிறைவு பெறும்’



தஞ்சாவூர், அக். 23 - அடுத்த 10 நாட்களில் நெல் கொள்முதல் பணிகள் அனைத்தும் முழுமையாக நிறைவடையும் என தஞ்சையில் ஆய்வு மேற்கொண்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தஞ்சாவூரில் அதிகாரிகளுடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களுடன் அவர் பேசுகையில், தஞ்சையில் 200 ஆக இருந்த கொள்முதல் நிலையங்கள் 300 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன. 10 நாள்களில் நெல் கொள்முதல் பணிகள் அனைத்தும் முழுமையாக நிறைவடையும் என்றார். காவிரி படுகை மாவட்டங்களில் 2 லட்சம் நெல் மூட்டைகள் வைக்க இடவசதி உள்ளது. எடப்பாடி பழனிசாமி கூறியது போல நெல் மூட்டைகள் நனையவோ அல்லது முளைக்கவோ இல்லை என்றும் தெரிவித்தார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%