பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுகிறார் விஜய் கருணாஸ் விமர்சனம்

பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுகிறார் விஜய் கருணாஸ் விமர்சனம்


சென்னை, அக். 23 - பாஜக கோட்பாட்டிற்கு ஏற்ப செயல்படும் நடிகராக விஜய் மாறியுள்ளார் என முக்குலத்தோர் புலிப்படை கட்சித் தலைவரும் நடிகருமான கருணாஸ் விமர்சித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த கருணாஸ், பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, “பாஜகவை எதிர்த்து அனைத்து சவால் களையும் சமாளித்துக் கொண்டிருக்கும் மு.க. ஸ்டாலி னை முழு இந்தியாவும் கவனித்துக் கொண்டிருக்கிறது. அவருடைய ஆட்சி தொடர வேண்டும் என்பது எங்களுடைய விருப்பம்” என்று தெரிவித்தார். கரூர் கூட்ட நெரிசல் விபத்தில் உயிரிழந்த நாற்பத் தொரு பேரின் குடும்பத்தினரை விஜய் சந்திக்காதது குறித்த கேள்விக்கு பதிலளித்த கருணாஸ், “மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் நள்ளிரவிலும் அங்கு சென்று உதவுபவர்தான் உண்மையான தலைவர். கரூர் துயர சம்பவத்தின்போது களத்தில் இறங்கி பணியாற்றியவர் நமது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் என்பதை யாராலும் மறுக்க முடியாது” என்றார். “அதிகாரத்தை கைப்பற்ற விரும்புபவர், தனது கட்சியினர், ரசிகர்கள் உயிரிழந்த நிலையில் வெளியே வராமல் இருப்பது சரியா? தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மக்களுக்கானவரா என்பதை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும். பாஜக நேரடியாக வராமல் மறைமுகமாக செயல்படும். அவர்கள் வகுத்த திட்டத்திற்கு ஏற்ப செயல்படும் நடிகராக விஜய் உள்ளார்” என்று கருணாஸ் கூறினார். அதிமுக குறித்து பேசிய கருணாஸ், “புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் உருவாக்கிய மாபெரும் இயக்கம் அதிமுக. இன்று அக்கட்சி நடத்தும் நிகழ்ச்சிகளில் அதன் நிர்வாகிகளே தமிழக வெற்றிக் கழக கொடியை ஏந்துகின்றனர்” என்று விமர்சித்தார்.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%