 
    
பச்சைக் கிளிகள்..
பச்சைக் கிளிகள்..
பாட்டுப் பாடுது.!
பசுமைக் காடு
ஆற்றங் கரையில்
கூட்டம் போடுது!
அச்சமில்லை..
அச்சமில்லை..
என்றே பேசுது.!
ஆடிப் பாடி..
ஆடிப் பாடி..
அன்பில் வாழுது!
வண்ண வண்ணப்
பூக்கள் நடுவே..
மேடை போடுது!
சின்ன சின்னப்
பறவைகள் கூடி..
செந்தமிழ்ப் பாடுது!
கூண்டுக் கிளிகள்
கூண்டுக் கிளிகள்..
சிறகு விரிக்கவே..
வேண்டும் வேண்டும்
விடுதலைக் காக...
ஒன்றாய் கூடுது!
வானம் மேலே..
பூமி கீழே..
யாவும் பொதுவாக..
கானம் பாடும்..
கானகம் எங்கும்.
மாறனும் பொதுவாக!
நாடும் வீடும்..
காடும் கழனியும்..
பசுமை நிலமாக..
நாளும் பொழுதும்
பச்சைக் கிளிகள்
பாட்டுப் பாடுது!
*வே.கல்யாண்குமார்.*
Related News
Popular News
TODAY'S POLL
 
            தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
                                50%
                            
                            
                        
                                50%
                            
                            
                         
                     
                                 
                                                             
                                                             
                                                             
                             
                             
                             
                             
                             
                             
                     
                     
                  
                  
                  
                  
                  
                 